திருகோணமலை உவர்மலை விவேகானந்தா பாடசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் மண்ட பத்தினுள் அனுமதிக்கப்படாமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா பாடசாலையில் இன்று 225 வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வைபவம் நடைபெற ஏற்பாடாகியிருந்துள்ளது.
இந்நிகழ்விற்கு வருகைதந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உட்பட அதிகாரிகள் அனைவரும் மண்டபத்திற்குள் செல்லவிடாது வழிமறிக்கப்பட்ட தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பரீட்சைக்கு தோற்றி40 வீதத்திற்கும் அதிகமான புள்ளிகள் கிடைத்தும் நேர்முக பரீட்சைக்கும் அழைக்கப்பட்ட 305 கிழக்குமாகாண வேலையில்லா பட்டதாரிகளில் 225 பேர்களுக்கு மட்டுமே நியமணம் வழங்கப்படுவதை கண்டித்து நியமனம் வழங்கப்படாத மீதமிருப்போர் காலை 8.00 மணிமுதல் 10.30 மணிவரைக்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.