மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி கற்று பட்டம் பெறுவோர், இலங்கை மருத்துவ சங்கத்தில் தங்களை பதிவு செய்யலாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ பீட மாணவர்களினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு அரசடியிலுள்ள மருத்துவ பீடத்தின் முன்னாலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி மட்டக்களப்பு நகர சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் மருத்துவ பீடம் வரையில் வந்து முடிவடைந்தது.
அதனையடுத்து அவ்விடத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சிறிய கூட்டம் ஒன்றை நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.