அமெரிக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட 71 பேர், நிர்க்கதியாகியுள்ளதாக வௌியான தகவல்கள் குறித்து இலங்கை வௌிவிவகார அமைச்சு பதிலளித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ஸ் சில நாடுகளின் பிரஜைகளை அந்த நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், அந்த நாட்டின் ஜோன் எப் கெணடி விமான நிலையத்தில், அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது, 71 பேர் தவித்து வருவதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.
எதுஎவ்வாறு இருப்பினும், இலங்கையர்கள் எவரும், அமெரிக்காவின் எந்தவொரு விமான நிலையத்திலும் நிர்க்கதியான நிலையில் இல்லை என, அந்த நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் தமக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மகேஷினி கொலன்னே சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்திலேயே அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
அதேபோல் இலங்கையர்கள் எவரும் இவ்வாறு நிர்க்கதியான அல்லது உதவி தேவையான நிலையில் இருப்பின் அமெரிக்க தூதரகத்தின் 001 917 597 7009 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் புதிய உத்தரவில் உள்ளடங்கியுள்ள நாடுகளின் பட்டியில் இலங்கை இல்லை எனவும் மகேஷினி கொலன்னே தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.