அவிசாவாளை-ஊருபெலப்பிட்டிய பிரதேசத்தில், வானொன்று இன்றுக் காலை 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 16 பேர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெரணியகலையிலிருந்து தெஹியோவிட்டப் பகுதிக்கு, மரண வீடொன்றுக்கு, பயணிகளை ஏற்றிச் சென்ற வானே, இவ்வாறு 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக்கலக்கமே, இவ்விபத்துக்குக் காரணமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்விபத்தில், 8 பெண்கள் உட்பட 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக, அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

