பங்களாதேஷிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்



பங்களாதேஷிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 259 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
காலி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் விக்கெட் இழப்பின்றி 67 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், பங்களாதேஷ் இன்றைய ஜந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
தமிம் இக்பால் 13 ஓட்டங்களுடனும் சௌமியர் சர்க்கார் 53 ஓட்டங்களுடனும் இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
தமிம் இக்பால் மேலதிகமாக 7 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலும் சௌமியர் சர்க்கார் மேலதிகமாக ஓட்டங்களைப் பெறாமலும் ஆட்டமிழந்தனர்.
பங்களாதேஷ் அணி மேலதிகமாக 130 ஓட்டங்களைப் பெறுவதற்குள் அடுத்த 08 வி்க்கெட்டுக்களையும் இழந்தது.
பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 06 விக்கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டதோடு, இந்தப் போட்டியில் ரங்கன ஹேரத் மொத்தமாக 09 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 494 ஓட்டங்களைப் பெற்றதோடு பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 312 ஓட்டங்களைப் பெற்றது.
182 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி 274 ஓட்டங்களைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது, இந்த வெற்றியின் மூலம் 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.