திருமலை கண்டி வீதி சிறிது நேரம் மூடல்



திருகோணமலை அபயபுர ஆரம்பபிரிவு பாடசலையில் காணப்படும் ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறுகோரி இன்று காலை 7.30 மணிமுதல் திருகோணமலை-கண்டி வீதியை வழிமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால், திருகோணமலையில் இருந்து புறப்படும் வாகனங்கள் அனைத்தும் அபயபுர சந்திக்கு வந்து 3ம் கட்டை உப்புவெளியூடாகவும் திருகோணமலை நகருக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பாழையூற்று மற்றும் மட்கோ ஊடாகவும் பொலிஸாரினால் திசை திருப்பிவிடப்பட்டன. 

ஆர்பாட்டக்காரர்களோ தமது கோரிக்கை நிவர்த்தி செய்து தரும் வரை தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம் என உறுதிபட தெரிவித்துள்ளனர். 

இதே பெற்றோர்கள் கடந்த வாரம் அபயபுர பாடசலைக்கு தமது பிள்ளைகளை அனுப்பாமல் பாடசாலை பகிஸ்கரிப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.