நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், தயாரிப்பாளருமான சந்திரஹாசன் உடல்நலக் குறைவால் லண்டனில் காலமானார்.
தனக்காகத் தன் சகோதரர் கண்ட கனவுகளில் பாதியைக்கூடத் தான் நிறைவேற்றவில்லை என நடிகர் கமலஹாசன் அவரது சகோதரர் மறைவிற்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன், மாரடைப்பு காரணமாக லண்டனில் உள்ள அவரது மகள் அணுஹாசன் வீட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார் . இவரின் மறைவுக்கு தென்னிந்திய திரைப்படச் சங்கமும், நடிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

