பொத்தானை தர்காவுக்கும் அதனோடிணைந்த பள்ளி வாயல் பிரதேசங்களுக்கும் முஸ்லிம் மக்கள் செல்வதற்காக தொல் பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கித்தருமாறு பொத்தானை பள்ளி வாயலின் நிர்வாகமும், அக்கரைப்பற்று வர்த்தக சங்கமும் பொத்தானை விவசாய அமைப்பும் ஒன்றிணைந்து ஸ்ரீ.ல.மு காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், உயர்பீட உறுப்பினருமான ஜனாப்.S.L.M.ஹனிபா மதனி அவர்களிடத்தில் கோரிக்கை முன்வைத்தனர்.
அக்கோரிக்கையை ஏற்ற ஹனிபா மதனி அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ ரஊப் ஹக்கீம் அவர்களின் உதவியுடன் தொல் பொருள் திணைக்கள பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்ததன் பயனாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
பொத்தானை தர்காவையும் அதனோடிணைந்த பள்ளி வாயலையும் மீட்டு வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திட்டமிட்டபடி 2017.03.11 ஆந் திகதி சனிக் கிழமை இரவு 8.00 மணிக்கு அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி முறாவோடைப் பிரதேசத்திலுள்ள Fast Food நிறுவனத்தின் மாடியில் கௌரவிப்புடன் கூடிய கலந்துரையாடல் நிகழ்வு மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்நிகழ்வில் அக்கரைப்பற்று தேசிய நீர் வழங்கல் அமைச்சின் இணைப்பாளர் ஜனாப்.A.L.M.மர்ஜுன் அவர்களும், அக்கரைப்பற்று வர்த்தக சங்க உரியையாளர்களும், பொத்தானை பள்ளி வாயல் நிர்வாகிகளும், விவசாய அமைப்பின் நிர்வாகிகளும் அதன் அங்கத்தவர்களும் உட்பட போராளி முஹிதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதன்போது அந்நிகழ்வினை தலைமை தாங்கி நடாத்திய. வைத்தியர் Dr.சித்தீக் அவர்களினால் அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான அல்ஹாஜ். S.L.M.ஹனிபா மதனி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் சமகால அரசியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மதனி அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

