-எம்.எஸ்.எம்.நூர்தீன்-
மட்டக்களப்பு, காத்தான்குடி கர்பலா வீதியில் பெற்றோல் குண்டுகள் இரண்டு, இன்றுக் காலை மீட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இந்த வீதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக சுத்தம் செய்துகொண்டிருந்த அவ்வீட்டுப் பெண்ணொருவர், பெற்றோல் குண்டுகள் கிடப்பதைக் கண்டு, அவ்விடத்தில் நின்ற பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து, காத்தான்குடி பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுதத்து, அங்கு விரைந்த பொலிஸார், குறித்த பெற்றோல் குண்டுகளை மீட்டுள்ளனர்.

