ஹட்டனில் பனிமூட்டம்: சாரதிகளுக்கு அறிவுறுத்தல்



-மு.இராமச்சந்திரன்-
 ஹட்டன் பகுதியில், அதிக பனிமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவுவதால், வாகனங்களைச் செலுத்தும் போது அவதானமாக இருக்குமாறு, சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். கொழும்பு - ஹட்டன் மற்றும்  ஹட்டன் -  நுவரெலியா பிரதான வீதியில் வாகனங்களைச் செலுத்துவோருக்கும் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் தலைமை விளக்குகளை ஒளிரவிட்டு  வாகனங்களைச் செலுத்துமாறு வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.   மலையகத்தில், அண்மைக் காலமாக மழையுடன் கூடிய காற்றும் பனிமூட்டமும் நிறைந்த வானிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.