போராட்டத்துக்கு தயாராகும் தொழிற் சங்கங்கள்



தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் சரியான தீர்வொன்றை வழங்காவிட்டால், பரந்தளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக இலங்கை தோட்ட தொழிலாளர்கள் சங்கம் கூறியுள்ளது. 

தமது பிச்சினைகள் குறித்து பிரதேச பெருந் ​தோட்டக் கம்னிகளுடன் இடம்பெற்ற பேச்சு தோல்வியில் முடிந்ததாக அந்த சங்கத்தின் செயலாளர் நாத் அமரசிங்க கூறினார். 

இது தவிர பல கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை தாதியர்கள் சங்கம் எதிர்வரும் 22ம் திகதி பரந்தளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. 

எப்போது வேண்டுமானாலும் தமது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் பேச்சு நடத்தி தீர்வொன்றை வழங்குவார்களானால் தாம் போராட்டத்தை கைவிடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க கூறினார்