ஜெனீவா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டம் வவுனியாவில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.
வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களுக்கு மண்டபத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, கூட்டம் ஆரம்பமாகியதும் ஊடகவியலாளர்கள் மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

