(அல் ராஷித்) பஸ் வண்டி அதி காலையில் தாக்குதல்



சம்மாந்துறை  ஊடாக அக்கப்பற்றை நோக்கி பயணித்த AL RASHITH (அல் ராஷித்) பஸ் வண்டி இன்று அதி காலை 04.40 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில் வைத்து கல்லெறி தாக்குதலுக்குள்ளானது .

இத் தாக்குதலினால் இடது பக்க இரண்டு கண்ணாடிகள் சேதமடைந்தன. கல்வீச்சுக் காரணமாக பாரிய சத்தத்துடன் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதனால் பயணிகளில் சிலர் சிறு காயங்களுக்குள்ளாகினர்.

இந்த பஸ்ஸில் ஆண், பெண், சிறுவர்கள் ,கைக் குழந்தைகள் எனப் பலரும் இருந்ததனால் பீதியுடன் கலவரம் அடைந்தனர் .

அக்கரைப்பற்று மட்டக்களப்பு ஊடாக கொழும்பு இரு வழிப் பாதை பயணத்தில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் தீவீர தொழில் போட்டியினால் பயணிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது  .

தொடர்ச்சியாக நடை பெற்றுவரும் இத் தாக்குதல்களினால் அச்சமடைந்துள்ள பொது மக்கள் இப் பாதையூடாக பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர் .

பஸ்கள் எந்த வகையிலாவது பாதிக்கப்படும் போது பஸ் உரிமையாளர்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் நஷ்ட்ட ஈடு கிடைக்கும் ஆனால் பாதிக்கப்படும் பொது  மக்களுக்கு எவ் வித நஷ்ட்ட ஈடும் கிடைப்பதில்லை என்பது கவலைக்குரிய விடயம் .

எது எவ்வாறாக இருந்தாலும் மக்கள் பயணிக்கும் போது இவ்வாறு நடந்து கொள்ளுவது கவலைக்குரிய விடயமாகவும். ஏதும் பிரச்சினைகள் இருந்தால் நீதிமன்றம் அல்லது வேற வழிகளில் உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பது சிறந்தது.