முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார்



மத்திய மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ரேனுகா ஹேரத் தனது 72 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.
40 வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சிக்காக அரசியலில் ஈடுபட்ட அவர் கட்சியின் முக்கிய பதவிகளையும், அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
ரேனுகா ஹேரத் நேற்றிரவு காலமானதாக மத்திய மாகாண எதிர்க்கட்சி ஏற்பாட்டாளர் சானக அயிலப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
அன்னாரின் பூதவுடல் இன்று மாலை மத்திய மாகாண சபைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
அன்னாரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.