உயர் அதிகாரிகள் சிலருக்கு உடனடி இடமாற்றம்



பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நான்கு பேரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 15 பேரும் உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. 

அதன்படி பிரிதி பொலிஸ் மா அதிபர்களான கே.எஸ்.பீ.ஆர். டயஸ், பீ. முணசிங்க, ஏ.ஆர்.ஜே சில்வா, கே.பி.ஏ. குணரத்ன ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இது தவிர மூன்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆறு பேரும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.