-உமாமகேஸ்வரி-
மூன்று மாதங்களுக்கான சமூர்த்தி நிவாரணக் கொடுப்பனவை உடனடியாக வழங்குமாறு கோரி, இரத்தினபுரி மாவட்ட சமூர்த்தி பயனாளிகள், இரத்தினபுரி நகர மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக, இன்று (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சரும் ஒன்றிணைந்த எதிரணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி பவித்திரா தேவி வன்னியாராய்ச்சி தலைமயில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணம், கடந்த 3 மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரினர். இவ்வார்ப்பாட்டத்தில், சுமார் 500இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.