மஹரகம, தஹம் மாவத்தையிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தினால், 3 வீடுகள் முற்றாக எரிந்து சம்பராகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீயினால், மேலும் 7 வீடுகளுக்கு பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குடியிருப்புத் தொகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட மின் கசிவே, இத் தீ விபத்துக்குக் காரணமென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

