கொள்ளுப்பிட்டி ஜேம்ஸ் பீரிஸ் வீதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடமொன்றின் பகுதியொன்று உடைந்து வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த கட்டிடத்தில் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பணியாளர்கள் மீது கட்டிடத்தின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் நுவரெலிய - மீபிலிபான பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
அவரது சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
