உலகின் தலைசிறந்த நகரமாக வியன்னா தெரிவு



உலகின் தலைசிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மெர்சர் என்ற நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது.
மொத்தம் 231 நகரங்களை வைத்து மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 2 ஆவது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரமும், 3 ஆவது இடத்தை நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரமும் 4 ஆவது மற்றும் 5 ஆவது இடங்களை ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கோவர் நகரங்களும் பிடித்துள்ளன.