வெற்றிக்கிண்ணம் இலங்கை வந்தது



சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சாம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வெற்றிக்கிண்ணத்தைக் காட்சிப்படுத்தும் வைபவம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ், மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி பிரசாதினி வீரக்கொடி ஆகியோரின் பங்களிப்புடன் வெற்றிக்கிண்ணம் காட்சிப்படுத்தப்பட்டது.
சாம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்த முறை இங்கிலாந்தும் வேல்ஸூம் இணைந்து நடத்துவதுடன், தொடர் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கடந்த வருடம் டெஸ்ட் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை வகித்த நாடுகள் இதில் போட்டியிடத் தகுதிபெற்றுள்ளன.
இலங்கை தனது முதல் போட்டியில் ஜூன் 3 ஆம் திகதி தென் ஆபிரிக்காவை எதிர்த்தாடவுள்ளது.
சாம்பியன்ஸ் வெற்றிக் கிண்ணம் நாளை மறுதினம் (25) பாகிஸ்தானுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.