2016 – 2017 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளின் பாடவிதானம் மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான விருப்பத் தெரிவுகளுக்கான முடிவுத்திகதி எதிர்வரும் திங்கட்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விண்ணப்பதாரிகளுக்கு தாம் கற்க விரும்பும் பாட விடயங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் விருப்பத் தெரிவுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டார்.
எனினும், இந்த சந்தர்ப்பம் நாளை மறுதினத்துடன் (20) நிறைவடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பல்கலைக்கழகத்திற்கு இம்முறை 71,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதும், அதனை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி ஒன்று மாணவர்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

