மொரட்டுவை விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு



மொரட்டுவ, எகொடஉயன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று  பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அந்தப் பிரதேசத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த மூன்று பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.