டெங்கு: கிண்ணியாவில் இறந்தோர் எட்டாக உயர்வு!



(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினால் இன்று (12) அதிகாலை இருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வபாத்தாகியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவ்வாறு வபாத்தானவர்கள் கிண்ணியா, மாஞ்சோலைச்சேனை பகுதியைச்சேர்ந்த எஸ்.ஏ.றிஸ்வானா (33வயது) மற்றும் கிண்ணியா, மக்கள் வங்கி வீதியைச்சேர்ந்த பாத்திமா சனா (06வயது) எனவும் தெரியவருகின்றது.
கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நோயினால் 1150 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிண்ணியா சுகாதார சேவைகள் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.