காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்



காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுற்த்தி கிளிநொச்சியில் 22 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.
வெயில் மழை, இரவு பகல் பாராது எதிர்ப்பார்ப்புக்களுடன் தொடர்கின்றது இந்த உறவுகளின் போராட்டம்.
வவுனியாவிலும் 18 அவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.
அத்துடன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தபால் முத்திரைப் போராட்டத்தில் சேகரிக்கப்பட்ட கடிதங்கள் இன்று வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் ஆறாவது நாளாகவும் தெடர்கின்றது.
திருகோணமலை மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.
மேலும் மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கம் இன்று பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தது.
மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்திலிருந்து மாவட்ட செயலகம் வரை கண்டனப் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் பாராளுமன்ற உறுப்பின்ர் சார்ல்ஸ் நிர்மலனாதன் வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மன்னார் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பதற்காக மாவட்ட செயலக வளாகத்தில் பேரணியில் ஈடுபட்டவர்கள் கூடியிருந்தனர்.
இந்தநிலையில் அரசாங்க அதிபர் அந்த இடத்திற்கு வர மறுத்தமையினால் பேரணியில் கலந்துகொண்டவர்கள் பிரதான வீதியில் அமர்ந்து கோசங்களை எழுப்பினர்.
பாராளுமன்ற உறு்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட குழுவினர் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரியவுடன் பேச்சுவார்த்தயைில் ஈடுபட்டதன் பின்னர் அலுவலக வளாகத்திற்கு வருகைதந்து ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜரை பெற்றுக்கொண்டார்.