கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா, இன்று நடைபெற்றது. சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான இத்திருவிழாவில், விசேட திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன கலந்துகொண்டார். இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த யாத்திரிகர்கள், பெருமளவில் கலந்துகொண்டனர்.

