அநுராதபுரம், விஹார – களன்சிய பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 35 வயதுடைய பெண் ஒருவரது சடலமும் குறித்த பெண்ணின் ஒன்றரை மற்றும் நான்று வயதுடைய மகள்கள் இருவரது சடலங்களே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தாயின் சடலம், வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையிலும் மகள்களின் சடலங்கள், வீட்டின் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

