கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் ​கொலை



கடவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 39 வயதுடைய நபரொருவர்  கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு பயன்படுத்திய வாளுடன் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரும் படுகாயமடைந்த நிலையில், பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.