மீதொட்டமுல்ல:பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் பிரதமர்



வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (19) அதிகாலை நாடு திரும்பிய ரணில் விக்ரமசிங்க இன்று (19) மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.
இதேவேளை அனரத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடுகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அவர்களுக்கு அந்த வீடுகளுக்கு செல்ல முடியும் எனவும் அதுவரையான கால்பகுதியில் அவர்களுக்கான மாற்றுத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் இதன் போது பிரதமர் குறிப்பிட்டார்.