வர்ணனையாளராகும் குமார் சங்கக்கார



சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார வர்ணனையாளராக களமிறங்கவுள்ளார்.
இந்த தகவலை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் முக்கியமான கிரிக்கெட் தொடர்களில் சம்பியன்ஸ் கிண்ண தொடரும் ஒன்றாகும்.
இம்முறை நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண தொடரை இங்கிலாந்தும் வேல்சும் இணைந்து நடத்தவுள்ளன.
இந்த தொடருக்கான 08 பேர் அடங்கிய தூதூவர் குழாத்தில் ஒருவராக இடம்பெற்ற குமார் சங்கக்கார சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராகவும் களமிறங்கவுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொன்டிங் , நியூசிலாந்து அணியின் பிரன்டன் மெக்கலம் , தென்னாபிரிக்காவின் கிறேம் ஸ்மித் ஆகியோரும் இதற்கான வர்ணனையாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.