டில்சாணுக்கு தவறாது மன்றில் தோன்றுமாறு ஆணை



கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன தில்ஷான் இன்று தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தில்ஷான்
ஜீவனாம்சம் கோரி அவரது முன்னாள் மனைவி தாக்கல் செய்துள்ள வழக்கொன்றில் தில்ஷான் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.முன்னாள் கேப்டன்கள் மீது தில்ஷான் குற்றச்சாட்டு
சம்பந்தப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, திலகரத்ன தில்ஷான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
எனவே, அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.இன்று தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் சரணடைந்த தில்ஷான் கைது உத்தரவை வாபஸ் பெறுமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த வேண்டுகோளுக்கு இணங்க, கைது உத்தரவை வாபஸ் பெற்ற நீதிபதி வழக்கு விசாரணைகளுக்கு தவறாமல் வர வேண்டுமென திலகரத்ன தில்ஷானுக்கு ஆணையிட்டார்.
அதன் பின்னர், அடுத்த மாதம் 24 தேதி நடைபெறும் விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு தில்ஷானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.