டெரன்ஸ் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2 தினங்களில்



மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள டெரன்ஸ் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2 நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
உரிய வகையில் பாடசாலையை துப்புரவு செய்ததன் பின்னர் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
மீதொட்டமுல்ல மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இடம்பெயர்ந்த 98 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை வீடுகள் வழங்கப்படாத 140 பேரிற்கு தலா 50,000 ரூபா கொடுப்பனவு கொடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
இன்றைய தினமும் மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.