சுபநேரங்கள் அடங்கிய சுவடி ஜனாதிபதியிடம்



தமிழ் – சிங்கள புதுவருடத்திற்கான சுபநேரங்கள் அடங்கிய சுவடி, சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (11) கையளிக்கப்பட்டது.
கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன மற்றும் அமைச்சின் செயலார் டி.சுவர்ணபால ஆகியோரால் சுபநேரங்கள் அடங்கிய சுவடி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
வருடப்பிறப்பில் சுபகாரியங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டிய நேரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த சுவடியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.