கிரிக்கெற் துறையினருக்கு ஜனாபதியின் இராப்போசணம்



இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மற்றும் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் அண்மையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.
கிரிக்கட் விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வழங்கிய பங்களிப்புகள் இங்கு நன்றியுடன் நினைவுகூரப்பட்டது.
வருகைதந்த அனைவருக்கும் ஜனாதிபதியால் இராப்போசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது.
ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தின் தலைவர் சஹர்யார் எம் கான், (Shaharyar M. Khan) பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தலைவர் அமைச்சர் நஸ்முல் ஹசன், (Nazmul Hassan) நிறைவேற்று அதிகாரி நிஜாமுத்தீன் சௌத்திரீ(Nizam Uddin Chowdhury) ஆகியோரும் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.