மர்ம உறுப்பு வெட்டப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு தொடர்ந்து சிகிச்சை




காதலியால் மர்ம உறுப்பு வெட்டப்பட்ட பொலிஸ் அதிகாரி தற்போது சுகமடைந்து கொண்டிருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்றைய தினம் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். 

மின்னேரிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மர்ம உறுப்பு அவரது காதலியால் வெட்டப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தீவிர நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் தற்போது அவர் சுகமடைந்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் கூறினார். 

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹிங்குராங்கொட பகுதியில் வசித்து வந்த கணவனை இழந்த பெண்ணொருவருடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார். 

அதேநேரம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அண்மையில் மற்றொரு பெண்ணுடனும் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இதனை அறிந்து கொண்ட முதலாவது காதலி அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மர்ம உறுப்பை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.