மாத்தறை - ஹம்பாந்தோட்டை தெற்கு அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீனப் பிரஜைகள் தங்கிருக்கும் விடுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயினால் திஹகொட பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இதேவேளை, பிரதேச மக்கள் மற்றும் மாத்தறை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும், இந்த விபத்தினால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை.
தீக்கான காரணம் மின் கோளாறே என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.