டி20 ஆட்டங்களில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் கிறிஸ்கெயில்.
ஐ.பி.எல் தொடரின் 10வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ்கெயில் விளையாடி வருகிறார். அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ள கெயில், தனது சாதனை மகுடத்தில் தற்போது மேலுமொரு வைரத்தை சூடியுள்ளார். கிரிக்கெட் உலகில் பல்வேறு டி20 தொடர்களில் விளையாடி வரும் கெயில், எந்த வீரரும் செய்யாத சாதனையாக 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மெக்கல்லம் 7596 ரன்களை குவித்துள்ளார். மேலும், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட்கோலி 8வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 9வது இடத்திலும் உள்ளனர்.290 போட்டிகளில் பங்கேற்றுள்ள கெயில், 18 சதங்களையும், 743 சிக்சர்கள் மற்றும் 769 பவுண்டரிகளையும் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment