முஸ்லிம் பாடசாலைகள் மீள ஆரம்பம்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சகல முஸ்லிம் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக,  (19) புதன்கிழமை இன்று   மீண்டும் ஆரம்பமானது.
மேலும், அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரி, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, தர்கா நகர் தேசியக் கல்விக் கல்லூரி என்பனவும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் புனித ரமழான் நோன்பு விடுமுறைக்காக எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் 27ஆம் திகதி வரை மீண்டும் மூடப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது