சம்மாந்துறை பிரதேசத்தில் தார் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட அம்பாறை 10 ஆம் வீதி, அம்பாறை 12 ஏ வீதி, மல்வத்தை 6 ஆம் வீதி, அல் ஹம்றா வீதி மற்றும் ஹிஜ்றா 02ஆம் வீதி, மதீனா உம்மா வீதி, முகைடீன் மாவத்தை ஆகிய குறுக்கு வீதிகளை நேற்று (10) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.
இதேவேளை, சம்மாந்துறையிலுள்ள மல்வத்தை 15 ஆம் குறுக்கு வீதி, அல் அர்சத் வடக்கு வீதி ஆகியவற்றை தார் வீதியாக செப்பனிடுவதற்கான பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அத்துடன், சபூர் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சிறிய பாலமும் அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். மாஹிர், ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ. காதிர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


Post a Comment
Post a Comment