பரீஸ் நகர துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி பலி



பாரீஸ்: 

பிரான்ஸ் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் போலீஸ் மீது குறி வைத்து நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் நகரின் மிக முக்கிய சாலையான சேம்ஸ் எலிஸஸ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தாக்குதல் நடந்துள்ளது. காரில் வேகமாக வந்த தீவிரவாதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது குறி வைத்து துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளான். இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 1 போலீஸ் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். போலீசார் திருப்பி தாக்கியதில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். 

விசாரணையில் ஐஎஸ் தீவிரவாதி என அபு யூசப் ஹல் பெல்ஜிக்கி பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்ந 2 மாதங்களில் தீவிரவாதிகள் 3 முறை பிரான்ஸ் நாட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனிடையே இந்தியாவில் நாச வேலைகளை அரங்கேற்ற திட்டமிட்டிருந்த ஐஎஸ் தீவிரவாதி 4 பேர் பிடிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.