வடக்கின் வீராங்கனை நட்சத்திரம் புதிய இலங்கை சாதனை



800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கடற்படையின் கயந்திகா அபேரத்ன இலங்கை சாதனையைப் படைத்தார்.
இந்த சாதனைக்காக அவர் 02 நிமிடங்கள் மற்றும் 2.55 விநாடிகளை எடுத்துக்கொண்டார்.
வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.45 மீற்றருக்குத் தாவி புதிய இலங்கை சாதனையைப் புதுப்பித்தார்.
மகளிருக்கான முப்பாய்ச்சலில் விதுஷா லக்ஷானி மற்றுமொரு இலங்கை சாதனையை நிலைநாட்டினார்.
13.67 மீற்றருக்கு தாவிய அவர் இந்த சாதனையைத் தன்வசப்படுத்தினார்.
இந்த சாதனைகளுடன் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தெரிவுப்போட்டிகள் நிறைவுக்கு வந்ததுடன், இதில் 06 இலங்கை சாதனைகள் நிலைநாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.