பள்ளத்தில் பஸ் விழுந்ததால் பரபரப்பு



சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் ஒரு பேருந்து மற்றும் கார் ஆகியவை சிக்கியுள்ளன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் அமெரிக்க தூதரகம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் 25ஜி என்ற இலக்கம் கொண்ட பேருந்து மற்றும் ஒரு கார் ஆகியவை சிக்கின.

பேருந்தில் உள்ள பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டள்ளனர். பள்ளத்தில் விழுந்த பேருந்து மற்றும் கார் ஆகியவற்றை மீட்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

இப்பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பும் ஒரு பள்ளம் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போது அங்கு விபத்து ஏதும் நடக்கவில்லை.