42,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த துருக்கிய விமானம் ஒன்றில் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர் அந்த விமானக் குழுவினர்.
அந்த விமானம் கின்னியாவின் தலைநகர் கொனக்ரியிலிருந்து ஒக்காடவ்கெளவ் வழியாக இஸ்தான்புஇருவரும் உடல் சோர்வுடன் இருந்தாலும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"28 வாரமாகும் நஃபி டியாபி என்ற அந்த பெண் பயணி, பிரசவ வலியால் அவதிப்பட்டதை அந்த விமான குழு கவனித்தது" என துருக்கிய விமான சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"விமான பயணத்தின் போது அவர் குழந்தை பெற விமான குழு உடனடியாக உதவி செய்தனர்."
பெரும்பாலுமான விமான சேவைகள், 36 மாத வரையிலான கர்பிணி பெண்களை அனுமதிக்கின்றனர்; ஆனால் 28 மாதத்திலிருந்து உள்ளவர்கள் அவர்கள் குழந்தை பெறும் தேதியை உறுதிப்படுத்தும் விதமாக மருத்துவரின் கடிதத்தை சமர்பிக்க வேண்டும்.
தாய் மற்றும் கடிஜு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பெண் குழந்தை புர்கினோ ஃபாசோவின் தலைநகரில் விமானம் தரையிறங்கப்பட்டதும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

