பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை



கொழும்பு - காலி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பேரணியாக வந்த மாணவர்கள் அலரி மாளிகை நோக்கி செல்ல முற்பட்ட வேளை, லோட்டஸ்ட் சுற்றுவட்டத்திற்கு அருகில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை மூட வலியுறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோ இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.