துருக்கியின் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு மக்கள் ஆணை



(ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )

துருக்கியினைப் பொறுத்தவரை பெரும்பான்மை முஸ்லிம் நாடாக இருந்தாலும் அது மதச் சார்பற்ற நாடு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. காரணம் காலநித்துவ நாடுகளின் ஆதிக்கமும் அரபு தேசியவாதத்தின் குமுறல்களும் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைத்தது . இதனால் துருக்கியில் இருந்து அரபு மொழி வெளியேற்றப் பட்டது. அரபு பொழி மூலம் பேசினால் அவருக்கு அரசினால் தண்டனை வழங்கப்பட்டது.  இந்த நிலை துருக்கியின் கிலாபத் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஆரம்பமானது. 

துருக்கியைப் பொறுத்தவரை  1980 ஆண்டு இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து வகுக்கப்பட்ட   அரசியல் யாப்பே தற்போது நடை முறையில் உள்ளது . இந்த யாப்பு துருக்கியின் தற்காக அரசியலுக்கு பாரிய இடைஞ்சலாக உள்ள படியினால் 2015 நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி அர்துகான் துருக்கியின் எதிர்கால நலனுக்கு அனைத்து கட்சிகளும் கை கொடுக்க வேண்டும் .  துருக்கியின் அரசியல் யாப்பு மாற்றம் தேவை . தற்போது உள்ள அரசியல் யாப்பு துருக்கியின் எதிர்கால வளர்சிக்கு பாரிய சவாலாக உள்ளது  என்று  பாராளுமன்றத்தில் பேசினார்.  மேலும் கூறுகையில் அவ்வாறு துருக்கியின் அரசியல் யாப்பு மாற்றத்தில் அனைத்து கட்சிகளும் தங்களின் ஆதரவைத் தராவிட்டால் துருக்கிய மக்களின் கையில் விடப்படும் என்று சொன்னார் . இதன் பிரகாரமே 2017. 04. 16 அன்று இடம்பெற்ற வாக்கெடுப்பு . 

அல் ஹம்துலில்லாஹ் தற்போது துருக்கில் பழைய அரசியல் யாப்பு ஒழிக்கப்பட்டு புதிய அரசியல் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்பது மக்கள் தீர்ப்பாக மாறிவிட்டது .

☞துருக்கி முழுவதும் நடைபெற்ற வாக்குவீதம் 

✅ மாற்ற வேண்டும்  51,88%
❌மாற்ற வேண்டாம் : 48,12%

# Turke_uz #Turkeynews