விண்ணப்பங்களுக்கு காலநீடிப்பு



இலங்கை பொலிஸில் உள்ள 1,500 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான திகதி, எதிர்வரும் ஜுன் மாதம் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு, நேற்று (28) அறிவித்தது. பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் கான்ஸ்டபளில் (சாரதி) ஆகிய பதவிகளுக்கு, நாடு பூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பொலிஸ் தலைமைக்காரியாலயத்தினால் விண்ணபங்கள் கோரப்பட்டிருந்தன. 

விசேடமாக, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே, அதிக வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுவதற்காக, தமிழ் பேசத் தெரிந்தவர்களது விண்ணபங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு,  2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பார்ப்பதன் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும்.