இறக்காம மக்கள் மறக்க முடியாத தலைவர் அமைச்சர் றிசாத்




ஜெமீல் அகமட்


கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இனைந்து  போட்டியிட்ட போதும் அதன் ஆதரவாளர்கள் யானை சின்னத்துக்கு வாக்களித்த மக்கள் தனது மூன்று தெரிவுகளில் ஒன்றை ஐக்கிய தேசிய கட்சியின் வேற்பாளர் தயாகமகேவுக்கு புள்ளடியிட்டனர் அதனால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பெரும் ஆதரவுடன் வெற்றியிட்டி இன்று பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருக்கின்றார் தாயாகமகே அவர்கள் என்பது சகலரும் அறிந்த விடயம்



அத்தோடு சம்மாந்துறை தொகுதியில் தயாகமகேவுக்கு அதிக விருப்பு வாக்கு அளித்த மக்கள்  என்றால் அது இறக்காம பிரதேச மக்கள் என்று தான் கூற வேண்டும் அதை யாரும் மறுக்க முடியாது



இந்த நிலையில் கடந்த வாரம் இறக்காம பிரதேச மக்களுக்கு ஏற்பட்ட எதிர்பாராதா அசாதாரன நிலையால் ஆயிரம் பேர் அளவில் சுகயினமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர் அதில் மூவர் மரணம் அடைந்தனர் அதனால் அம்பாறை மாவட்டம் எங்கும் சோகமாக காணப்பட்ட போது பல அரசியல்வாதிகள் அந்த மக்களின் துயரத்தில் கலந்து கொண்டனர்



ஆனால் தனது அரசியல் நிலையை உறுதிப்படுத்த பெரும் பங்களிப்பு செய்த அன்மித்த கிராமத்தில்  ஏற்பட்ட அசாதாரன நிலையை நேரில் வந்து பார்க்க முடியாத ஒரு மக்கள் பிரதிநிதியாக இன்று அமைச்சர் தயாகமகே அவர்கள் மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார் இது முஸ்லிம் மக்களின் மனதில் ஆராத வடுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை



தேர்தல் காலத்தில் முஸ்லிம் மக்களுடன் மிகவும் அன்பாக பழகிய தாயாகமகே வெற்றியின் பின் தனது இனவாத சிந்தனையோடு நடந்து கொள்வது தெரிய வந்துள்ளது (மானிக்கமடு சிலை) இதனால் முஸ்லிம் மக்கள் மிகவும் கவலையுடன் இருக்கின்றனர் அவர்கள் எதிர்வரும் தேர்தல்களில் மிகவும் அவதானமாக தனது வாக்கைபயன்படுத்தவுள்ளனர் அதனால் தயாகமகே முஸ்லிம்களின் ஆதரவை இழக்க நேரிடும் அதனால் அவர் இப்போது செய்யும் அரசியல் என்பது கடைசி அரசியலாகவே இருக்கும் அதுமட்டுமல்ல தற்போது அம்பாறை மாவட்டத்தில் யானைக்கு உரிமையாளராக இருக்கும் நான்கு பேருக்கும் இது இறுதி அரசியல்லாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை



ஆனால் ஒன்று மட்டும் நாம் விளங்கி கொள்ள வேண்டும் அதாவது வன்னியில் அரசியல் செய்தாலும் அம்பாறையில் அரசியல் அதிகாரம் இல்லை என்றாலும்  தற்போது மக்கள் அதிகாரத்தை கொண்டு இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்கள் இறக்காம மக்களின் நிலையறிந்து தாமதமின்றி விமானம் மூலம் இறக்காம் வந்தார் வந்தததும் ஜனாசா வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி தன்னால் முடிந்த பண உதவியை செய்தார் அத்தோடு வீடும்  கட்டி தருவதாக வாக்குறுதியளித்தார் பல அதிகாரம் கொண்ட அமைச்சர்கள் இருந்தும்  இறக்காம மக்களின் துயரத்தில் முதலில் கலந்து கொண்டவர் அமைச்சர் றிசாத் என்றால் மிகையாகாது இப்படியான மனித நேயம் கொண்ட அமைச்சர் றிசாத் அவர்களை இறக்காம மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள் மறக்கவும் கூடாது