மஹரகம அரச மரத்தை வெட்டியகற்ற தடை



மஹரகம, பண்ணிப்பிடிய பகுதியிலுள்ள 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரசமரமொன்றை வெட்டி அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை எடுத்த தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பௌத்த பிக்குகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, நேற்று ஆராய்ந்த போதே, உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குறித்த மரம், புனித வரலாற்றைக் கொண்டது. 

மரத்தை வெட்டாமலேயே வீதியை விஸ்தரிக்க முடியுமென, மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள், அரச மரத்தை வெட்டுவதற்கு, எதிர்வரும் 9ஆம் திகதி வரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து, விடயங்களை முன்வைக்குமாறு பெருந் தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.