இறக்காமத்தில் இதுவரை 3 பேர் மரணம்.உணவு நஞ்சானதன் விளைவு



கந்தூரி நிகழ்வில் உணவு ஒவ்வாமையால் மூவர் உயிரிழப்பு. இறக்காமப் பிரதேசத்திற்கு உட்பட கிராமமான வாங்காமம் என்ற கிராமத்தில் பள்ளிவாசலில் ஒன்றில் ஏற்பாடு செய்த கந்திரி வைபவத்தில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டமையால் 1000 க்கும் மேற்பட்டவர்கள் காச்சலினாலும் வைற்று வலியினாலும் வைய்ற்றுப் போக்கினாலும் பாதிக்கப்பட்டு இறக்காமப் பிரதேச வைத்தியசாலையிலும் அம்பாரை மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் . மேலும் அந்த உணவின் ஒவ்வாமை காரணத்தினால் மக்கள் தொடர்ந்து பீதியடைந்து அவதிப்பட்ட நிலையில் உள்ளனர் . இதுவரைக்கும் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாகவும் அதேபோல் இரண்டு பேர் படு மோசமான நிலையில் உள்ளதாகவும் மேலும் 400 க்கும் மேற்பட்டவர்கள் இறக்காமப் பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாவிட்டாலும் ஒரு சிலர் கூறுகின்றார்கள் சமைக்கப்பட்ட எண்ணைதான் காரணம் அது காலாவதியாகியும் அதை சமைத்தவர்கள் பொருட்படுத்தவில்லை என்றகின்றனர் . தற்போது இதற்கான காரணத்தை கண்டறிவதில் பொலீஸ் அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் இது ஒரு புறம் . மற்றொரு புறமாக இவர்களுக்கு முதலுதவி செய்யும் நோக்கில் பல நிறுவனங்களும் பல அமைப்புகளும் மும்முறமாக செயற்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்காக நீங்களும் பிராத்தியுங்கள் தகவல் ஹபீஸுல் ஹக் (பாதிஹி ) வரிப்பத்தான்சேனை