4 வாகனங்களை சேதமாக்கிய தோரணம்



கிரிபத்கொடை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தோரணம் விழுந்ததில் சில வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

எதுஎவ்வாறு இருப்பினும், இதனால் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. 

அத்துடன், தோரணம் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

நிலவும் சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் என தெரிகிறது.