அக்கரைப்பற்று வட்டியில்லா நிதியமைப்பின் ஓராண்டு




(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)

அக்கரைப்பற்று BTA ஓராம் ஆண்டை வெற்றிகரமாய் கடக்கின்றதை காண,கண்கள் பனிப்பது ஆனந்தக் கண்ணீரை. இதற்காக உழைத்த நேரடியாகவும்.மறைமுகமாகவும் அர்ப்பணித்த அத்தனை பேரையும்,இறைவன் பொருந்திக் கொள்ளட்டும்!

நாமும் பிராத்திப்போம்!

அரச, தனியார்  மரபு ரீதியான வங்கிகளுக்குச் சென்று,தமது உடைமைகளை அடகு வைத்து, தமது அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காகவோ அல்லது சுய தேவையின் நிமித்தமோ     கடன் பெற்று வந்துள்ளதையும், அவற்றை அடைக்க முடியாமல் போகும் போது,தமது நில புலங்கைளை மரபு வங்கிகள் சுருட்டிய வரலாற்றையும் மக்கள் நன்கறிவர். பாதிக்கப்பட்டதால், நீதிமன்றங்களை நாடிச் செல்வோர் பலர்.

இவற்றைக் கண்டு கொண்ட சன் மார்க்க அறிஞர்கள்,அவற்றை தமது சன்மார்க்கப் பேருரைகளில்,இது பற்றி விமர்சித்தும் வந்துள்னர்.ஆனால்.அமைப்பு ரீதியாக அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு, பொருளியலாளர்கள் முன்வரவில்லை. தனி மனித முயற்ச்சி தோல்வியுமுற்றது.

இருப்பினும், இது பற்றிய சிந்தனைகளை விதைத்த (கவனமெடுத்த) அஸ்.ஸெய்க் அக்ரம் நளீமி பரேபாபகாரிகளின் உதவியினைக் கொண்டும், ஜம்மீயத்துல் உலமாவின் அங்கீகாரத்துடனும்,  ஆரம்பிக்கவேண்டும் என்று அவாக் கொண்டு களத்தில் இறங்கினார்.இறைவன் உதவியால் அவரது முயற்ச்சி கனிந்தது.  அதன் அறுவடையை, அக்கரைப்பற்றிலும், அதனைச் சூழவுள்ள இடங்களிலுமுள்ள வசதி குறைந்த மக்கள்  பெற அடித்தளமிட்டது.

ஆரம்பக் கட்ட பண உதவியில், பெருந்தொகையினை நன்கொடையாக, அல்.ஹாஜ். றிசாம் -FBC வழங்கி இதனைத் துவக்கு உதவினார் என்பதும் கண்கூடு.

வெளியில் இருந்து பார்ப்போருக்கு, கடன் வழங்கும்-BTA  எனத் தெரிகின்றது. மூலதனத்தை வைப்பில் இட்டு லாபத்தையும் பங்காளிகளுக்கு வழங்குகின்றது என எண்ணத் தோன்றுகின்றது.

ஆனால்,

இப்போதைக்கு BTA செய்ய வேண்டியது!

முதலீடு செய்வேரார் பணத்தை எங்கிருந்து பெறுகின்றார்கள் என்பதில் விழிப்பாய் இருத்தல்

பாமர மக்களுக்கும் புரியும் படி, தகவல்களை வழங்குதல் அல்லது சேர்ப்பித்தல்.

நிர்வாக அமைப்பை குறுகிய வட்டத்தினை விட்டு வெளியே கொண்டு வரல்.

முதலீட்டை, அல்லது பண வைப்புச் செய்யாமல் உள்ளோர்களின் ஆலோசனைகளையும் உள்ளீர்ப்புச் செய்தல், அங்கத்தவராக்குதல்.

பெரிய பள்ளி வாயலில் இதன் தலைமைக் காரியாலயம் அமையப் பெற்றாலும், ஏனைய இடங்களிலும் அதன் வலைப் பின்னலை விரிவு படுத்தல்

5ம் தரம், சாதண தரம், உயர் தரம் போன்ற பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு, மீளப் பெறாமல்,உதவு தொகைகளை வழங்குதல் போன்றவையாகும்.

மேற்கூறப்பட்ட செயற்பாடுகள், செயற்படுத்தப் படுமானால்,  அதனை  இப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு மகனும்.அதன் அனுகூலங்களை நுகரும் வாய்ப்புக் கிட்டுவதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.